இரயில்வே பட்ஜெட் – கட்டணங்கள் குறைப்பு

  • இன்று பாராளுமன்றத்தில் இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் வெளியிட்ட இரயில்வே வரவுசெலவு கணக்கு பேச்சில் பயணியர் கட்டணங்களை ஏசி முதல்வகுப்பில் கூட்டமில்லாத மாதங்களில் 6% உம், மற்ற சமயங்களில் 3%உம் குறைத்துள்ளார்.
  • Sleeper வசதி கட்டணங்கள் 4% குறைக்கப்பட்டுள்ளது.
  • பெட்ரோல்,டீசல் மீது கட்டணக்குறைப்பு5% ஆகவும் இரும்பு தாது போக்குவரத்தின் மீது 6% ஆகவும் குறைக்கப் பட்டுள்ளன.
  • கடந்த வருட இலாபமாக ரூ.20,000 கோடி காண்பிக்கப் பட்டுள்ளது.
இந்தியா, பொருளாதாரம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

ரயில்வே பட்ஜட் லைவ்

சற்றுமுன் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த 2007-2008ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:

முதல் வகுப்பு ஏசி கட்டணம் குறைகிறது

புறநகர் ரயில்களுக்கான டிக்கெட் விலையில் ரூ 1 குறைக்கப்படுகிறது

அதிவேக ரயில்களில் 2ம் வகுப்புக்கான கட்டணத்தின் மீதான சர்சார்ஜ் 20 சதவீதம் குறைக்கப்படும்

ஐஐஎம் அகமதாபாத்தில் ரயில்வே நிர்வாகம் குறித்த பிரிவு தொடங்கப்படும்

ரயில்வே தனியார்மயமாகாது

முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்

எஃகு, மின் உற்பத்தி நிலையங்களுக்கு தனி ரயில்கள்

32 புதிய ரயில்கள் அறிமுகம்

டிக்கெட் பரிசோதகர்களுக்கு பாம்டாப் வழங்கப்பட்டு, காலியான சீட்கள் குறித்த விவரம் அப்டேட் செய்யப்படும்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரயில்வே மின் மயமாக்கப்படும்

8 புதிய ஏழைகள் ரதம்ஏசி ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்

நாடு முழுவதும் ரயில்வே கால் சென்டர்கள் அமைக்கப்படும்

ரயில் வருகைகிளம்பும் நேரம் குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்படும்

ரயில்வே இந்த ஆண்டு ரூ. 20,000 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

பொதுப் பெட்டிகளில் (அன்ரிசவர்ட்)மரக் கட்டை சீட்களுக்கு பதிலாக குஷன் சீட்கள் போடப்படும்.

பிபாவாஜெய்ப்பூர் இடையே இரட்டை அடுக்கு ரயில் விடப்படும். இந்த சோதனை ரயில் வெற்றி பெற்றால் பிற பகுதிகளுக்கும் நீட்டிக்கப்படும்.

சரக்குப் போக்குவரத்துக்கு 3 அடுக்கு ரயில் அறிமுகப்படுத்தப்படும்.

முன் பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

நாடு முழுவதும் 8,000 தானியங்கி டிக்கெட் வழங்கும் மிஷின்கள் அமைக்கப்படும்

பெட்ரோல் பங்குகள், ஏடிஎம் மையங்களில் ரயில் டிக்கெட் விற்பனை

பால், காய்கறி கொண்டு போக பயணிகள் ரயில்களில் தனிப் பெட்டிகள்

யுபிஎஸ்சி தேர்வு எழுதுவோருக்கு 50% கட்டண சலுகை

முதியோர்கள், பெண்களுக்கு லோயர் பர்த்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

இந்தியா, பொருளாதாரம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

பார்லிமென்ட்டில் நாளை ரயில்வே பட்ஜெட் தாக்கல்

புதுடில்லி: பார்லிமென்ட்டில் நாளை ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பார்லிமென்ட்டில் நாளை (26ம் தேதி) ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் விமானங்களில் பொழுதுபோக்கு வசதிகள் இடம்பெறுவது போல ரயில்வேயில் குறிப்பாக சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொழுதுபோக்கு வசதிகள் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்படலாம் என ரயில் பவன் வட்டாரங்கள் தெரி வித்தன.

source : தினமலர்

பொருளாதாரம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

ஜப்பான் வர்த்தகம் – தினவட்டி விகிதம் 0.25% உயர்வு

ஜப்பானின் வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதமாக அந்த நாட்டின் தேசிய வங்கி அதிகரித்தது.

கடன் கொடுப்பதற்கான வட்டி அதிகரிப்பது; வைப்புநிதிகளுக்கான வட்டி மேலும் வருவது – போன்றவை, அதைத் தொடர்ந்து உயர்கிறது. இதன் பிரதிபலிப்பாக, பங்குச்சந்தை குறியீடான நிக்கெய், கடந்த ஏழு வருடங்களில் முதல் தடவையாக 18,000 ஆக உயர்ந்திருக்கிறது.

சாதாரணமாக வட்டி விகிதம் ஏறினால், கடன் பத்திரங்களின் விலை உயர்ந்து, பங்குச்சந்தை சரியும். ஆனால், ஜப்பானில் தலைகீழ். பணவீக்கத்திற்கு பயந்து எக்கச்சக்க சேமிப்பை வங்கிகளில் வைத்திருக்கும் நடுத்தர வர்க்கம், இவ்வித நடவடிக்கைகளினால் நம்பிக்கை அடைந்து, நுகர்வோராக செலவழிக்கவும், முதலீட்டாளராக சந்தையில் ஈடுபடவும் வழிவகுக்கும்.

Bloomberg.com: Japan | FT.com / World / Asia-Pacific – Nikkei hits seven-year high on rate hopes

பெண்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் பயன்தரும் பட்ஜட்

2007 பட்ஜட் பெண்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rediff

இந்தியா, பொருளாதாரம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »