அய்யோ……பூஊஊஊஊஊஊஊஊஊஊமி

நான் ………… என்பது உண்மையானால், இந்த பூமி பிளந்து என்னை விழுங்கட்டும்!

டமால்……….. பூமி பிளந்தது. விழுங்கியது. கேட்ட & படிச்ச நினைவு வருதுங்க.

இப்படியெல்லாம் நடக்குமா?

ஏன் நடக்காது?

இங்கே பாருங்க. பாவம் மூணு உயிரு(-:

*பொது, பதிவுலகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

எகிப்திய பதிவருக்கு சிறைதண்டனை

எகிப்த்தின் அலெக்சாண்டிரியா நீதிமன்றம் அப்துல்கரீம் சுலைமான் என்ற எகிப்திய பதிவருக்கு இஸ்லாத்தையும் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கையும் அவமதித்து பதிவு எழுதியதற்காகநான்கு வருட சிறைதண்டனை வழங்கியுள்ளது

உலகம், பதிவுலகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

சாகரன் உடல் தகனம்

சாகரன் அவர்களின் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்தன. அவரது முதிர்ந்த தந்தையார் இறுதிச் சடங்குகளை நடத்த அவரது உடல் மின்மயானத்தில் சரியாக 3.55க்கு தகனம் செய்யப் பட்டது.

வலைப்பதிவர் கவிஞர் பாலபாரதியால் தமிழ்மணத்தின் சார்பாக மலர்வளையம் சார்த்தப் பட்டது. மேலும் உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக தேன்கூடு தந்த சாகரனுக்கு ரோஜா மாலை சமர்ப்பித்து அஞ்சலி செலுத்தினார்.

பதிவர்கள் மா.சிவகுமார், லக்கிலுக் ஆகியோர் அவருடன் மின் மயானம் வரை சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் பதிவர் இகாரஸ் பிரகாஷ் அவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

சாகரன் பங்கேற்றிருந்த முத்தமிழ் மன்ற உறுப்பினர்கள் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் பல வலைப்பதிவு அன்பர்கள், அவரது நெருங்கிய நண்பர்கள், அலுவலக தோழர்கள், உறவினர்களின் துயர அஞ்சலியுடன் அவரது இறுதிப் பயணம் நிறைவுற்றது

அறிவிப்பு, பதிவுலகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

சாகரன் இறுதிச்சடங்கு இன்று

தேன்கூடு வலைதிரட்டியின் நிறுவனரும் சக வலைப்பதிவருமான சாகரன் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெறுகின்றன. முழுவிவரம் இங்கே
அறிவிப்பு, பதிவுலகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »