ஜப்பான் வர்த்தகம் – தினவட்டி விகிதம் 0.25% உயர்வு

ஜப்பானின் வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதமாக அந்த நாட்டின் தேசிய வங்கி அதிகரித்தது.

கடன் கொடுப்பதற்கான வட்டி அதிகரிப்பது; வைப்புநிதிகளுக்கான வட்டி மேலும் வருவது – போன்றவை, அதைத் தொடர்ந்து உயர்கிறது. இதன் பிரதிபலிப்பாக, பங்குச்சந்தை குறியீடான நிக்கெய், கடந்த ஏழு வருடங்களில் முதல் தடவையாக 18,000 ஆக உயர்ந்திருக்கிறது.

சாதாரணமாக வட்டி விகிதம் ஏறினால், கடன் பத்திரங்களின் விலை உயர்ந்து, பங்குச்சந்தை சரியும். ஆனால், ஜப்பானில் தலைகீழ். பணவீக்கத்திற்கு பயந்து எக்கச்சக்க சேமிப்பை வங்கிகளில் வைத்திருக்கும் நடுத்தர வர்க்கம், இவ்வித நடவடிக்கைகளினால் நம்பிக்கை அடைந்து, நுகர்வோராக செலவழிக்கவும், முதலீட்டாளராக சந்தையில் ஈடுபடவும் வழிவகுக்கும்.

Bloomberg.com: Japan | FT.com / World / Asia-Pacific – Nikkei hits seven-year high on rate hopes

ஐ ஃப்ளெக்ஸ் பங்குகள்; அரசுத் தலையீடு?

ஐ ஃப்ளெக்சின்(i Flex) பங்குகளை ஆரக்கிள் கார்ப்பரேஷனுக்கு விற்கும்படி பங்குதாரர்களை வர்புறுத்த இந்திய அரசாங்கத்தை அமெரிக்கா கேட்டுள்ளது. அமெரிக்காவில் இதுபோன்ற ச்டாம் இருப்பது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

ஆரக்கிள் தற்போது ஐ ஃபெளெக்சின் பங்குகளில் 82.9% பங்குகளை கைப்படுத்தியுள்ளது.

இந்திய சட்டப்படி பங்குகளை விற்கச் சொல்லி வர்புறுத்த எந்த வழியுமமில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் ET