இ-பைசைக்கிள் – பெங்களூரில் அறிமுகம்

பெங்களூரில் பேட்டரியில் இயங்கும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் “இ-பைசைக்கிள்” என்ற இருசக்கர அறிமுகமுகப்படுத்தியுள்ளது

வாகனத்தை சேவியோ என்ற நிறுவனம் இமாசல பிரதேசத்தில் தயாராகின்றது. சீனாவில் இருந்து பேட்டரிஇறக்குமதியாகிறது.

அரை யூனிட் மின்சாரம் இருந்தால் இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 55 கி.மீ. ஓட்டலாம். சார்ஜ் தீர்ந்தால் பெடல் செய்தும் ஓட்டலாம். பேட்டரியை தனியே பிரித்தெடுத்து சார்ஜ் செய்த பிறகு சைக்கிளில் பொருத்திக் கொள்ளலாம்.

இதில் 120 கிலோ பளு எடுத்து செல்லலாம். டபுள்ஸ் செல்லலாம். பிரேக் பிடித்ததும் பேட்டரி தானாக ஆஃப் ஆகிவிடும். சிக்னலிலோ, மற்ற இடங்களிலோ நிற்கும் நேரத்தில் மின்சாரம் செலவாகாது. மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.

ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள இ-பைசைக்கிளை பெங்களூரில் சுசில் வித்யுத் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது மாலை முரசில் வந்த செய்தி. வேறு சுட்டி கிடைத்தால் Update செய்யப்படும்.

அறிவியல், இந்தியா, தொழில் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

எம்பி3 காப்புரிமை வழக்கு – மைக்ரோசாஃப்ட் நஷ்ட ஈடு தர வேண்டும்

தமிழ்ப்பட பாடல்களை காப்புரிமை கவலை இல்லாமல், எம்பி3-ஆக ஐ-பாடில் இறக்கிக் கொள்ளலாம். ஆனால், அந்த எம்பி3 நுட்பம் குறித்த காப்புரிமை வழக்கில் மைக்ரோசாஃப்டுக்கு எதிராக ‘நடுவர் மன்றம்’ தீர்ப்பளித்திருக்கிறது. இன்னும் மேல் முறையீடு பாக்கி இருக்கிறது.

மைக்ரோசாஃப்டில் இருந்து ஒன்றரை பில்லியன் (4500 கோடி) வாங்கிய கையோடு, எம்பி3-ஐ பயன்படுத்தும் ஆப்பிள், இண்டெல், போன்ற மற்ற பெருந்தலைகளையும் அல்காடெல்-லூசெண்ட் வழக்குத் தொடுக்கலாம்.

Microsoft hit with $1.5 billion patent verdict | CNET News.com

Ford Fiesta புது மாடல் அறிமுகம் -ரூ.6.30 லட்சம்

போர்டு இந்தியா நிறுவனம், பியஸ்டா வரிசையில் 1.4 இசட்.எக்ஸ்.ஐ. டியூராடெக் (Ford Fiesta 1.4 L ZXI Duratec) என்ற புதிய வகைக்காரை சென்னையில் நேற்று அறிமுகம் செய்தது.

பியஸ்டா கார், மின்சாரத்தின் மூலம் இயங்கும் கண்ணாடிகள், அலாய் வீல், கடிகாரம், வெப்பநிலை காட்டும் கருவி, சாவி இல்லாமல் எலெக்ட்ரானிக் முறை மூலம் இயங்கும் கதவுகள், ஓட்டுநரின் இருக்கையை வசதிக்கேற்ப அமைத்துக்கொள்ளும் வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.

சென்னை மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையில் இந்திய, ஐரோப்பிய இன்ஜினியர்களின் கூட்டு முயற்சியில் இக்கார்கள் தயாரிக்கப்படுகின்றன.

The Hindu

இந்தியா, தொழில் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

ஹட்ச் நிறுவனத்தை கையகப்படுத்தும் வோடபோன் தலைமை அதிகாரி பிரதமருடன் சந்திப்பு

பிரட்டனை சேர்ந்த வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரி அருண் சரின் பிரதமர் மன் மோகன் சிங்கை தில்லியில் அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

ஹட்ச்-எஸ்ஸார் நிறுவனத்தில், ஹாங்காங்கைச் சேர்ந்த ஹட்சிசன் நிறுவனத்துக்குச் சொந்தமான பெரும்பான்மை (67 சதவீத) பங்குகளைக் கையகப்படுத்தும் முயற்சியில் வோடபோன் வெற்றிபெற்றுள்ளதை அடுத்து இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அருண் சரின், லண்டன் புறப்படுவதற்கு முன்னர் வெள்ளிகிழமை காலை பிரதமரை சந்தித்தார். அப்போது அவர் ஹட்ச்-எஸ்ஸார் சேவையை கிராமப்புறங்களுக்கும் விரிவு படுத்தும் திட்டத்தை வெளியிட்டார்.

ஹட்ச்-எஸ்ஸார் நிறுவனத்தின் 33 சதவீதப் பங்குகளை கையில் வைத்துள்ள எஸ்ஸார் நிறுவனத்துடன் கூட்டு தொடரும் என பிரதமரிடம் நம்பிக்கை தெரிவித்தார் அருண் சரின்.

10 கோடி வாடிக்கையாளர்களுடன் இந்தியாவின் முன்னணி செல்போன் சேவை நிறுவனமாக ஹட்ச்-எஸ்ஸாரை வளர்த்தெடுக்க, இன்னும் சில ஆண்டுகளில் வோடபோன் ரூ. 9 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அருண் சரின் ஏற்கெனவே கூறியிருந்தார். இவர் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினமணி

இந்தியா, தொழில் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »