சென்னையில் புதிய கார் தொழிற்சாலை

மகிந்த்ரா, ரெனால்ட் மற்றும் நிஸான் இணைந்து சென்னையில் ரூ. 4,000 கோடி முதலீட்டில் புதிய கார் தொழிற்சாலை ஒன்றை துவங்க உள்ளனர்.

தாட்ஸ்தமிழ்

டாடாவுடன் இணைந்து சென்னை விமான நிலையம் நவீனமயம்.

சென்னை மற்றும் கோல்கத்தா விமானநிலையங்களை நவீனப்படுத்தும் பணியில் டாடா குழுமத்துடன் இணைந்து செயல்பட போவதாக சிங்கப்பூரின் சாங்கி ஏர்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் (சிஏஐ) நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும்..இங்கே..

சென்னை இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

சென்னை சங்கமம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

“சென்னை சங்கமம்” நிகழ்வின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ‘தமிழ்நாடு 2020’ என்ற கட்டுரை போட்டி நடைபெற உள்ளது.

9,10, 11, 12 வது வகுப்பு மாணவ, மாணவியர் இதில் பங்கேற்கலாம். வெற்றி பெறும் 3 பேருக்கு “மாணவச சிந்தனையாளர்’ விருது மற்றும் ரூ. 5000/-, ரூ.2000/- ரூ.1000/- ஆறுதல் பரிசு வழங்கப்படும்.

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு அறிவுச் சுடர் விருது வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு – அகிலா ஸ்ரீனிவாசன், சென்னை சங்கமம், தமிழ் மையம், 68, லஸ் சர்ர் சாலை, மயிலாப்பூர், சென்னை – 600 004. தொ.பெ.எண். 24994344

மேலும் விபரங்களுக்கு …………………..

சென்னை இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

தேமுதிக கவுன்சிலர் திமுகவுக்கு தாவினார் – விஜய்காந்த் அதிர்ச்சி

சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக கவுன்சிலர் அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

இதன் மூலம் 5 இடங்களில் வென்ற மகிழ்ச்சியில் இருந்த தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு முதல் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

தேமுதிக சார்பில் 27வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சர்தார், திமுகவுக்குத் தாவியுள்ளார்.

அதே போல தேமுதிக சார்பில் வெற்றி பெற்ற மற்ற 4 வேட்பாளர்களுமே திமுகவுக்குத் தாவ தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பாஜக சார்பில் வெற்றி பெற்ற இரு வேட்பாளர்களில் ஒருவர் திமுகவுக்குத் தாவுவது குறித்து பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளார் எனத் தெரிகிறது.

உள்ளாட்சி உறுப்பினர்கள் கட்சி தாவினால் பதவி போகாது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல், சென்னை இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

சென்னை மாநகராட்சி: விஜயகாந்த் 2 திமுக கூட்டணி 35

இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 39 வார்டுகளில் 35ல் திமுக கூட்டணியும், இரு இடங்களில் தேமுதிகவும், சிபிஎம் 1 இடத்திலும் பாஜக ஒரு இடத்திலும் வென்றுள்ளன. மேலும் 2 இடங்களில் தேமுதிகவும் மற்ற அனைத்து வார்டுகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களும் முன்னணியில் உள்ளனர்.

சென்னை, தேர்தல்முடிவு இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »