நெல்லையில் தலித் பஞ்சாயத்து தலைவர் படுகொலை

நெல்லை மாவட்டத்தில் மருதன் கிணறு ஊராட்சிமன்றத் தலைவர் கடந்த 19-ம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களில் இரண்டாவது முறையாக தலித் ஊராட்சித் தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Dinamani

அரசியல், சமூகம், தேர்தல் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

இந்தியாவின் மணிப்பூரில் பிரிவினைவாதிகளின் தாக்குதலில் 15 துணை இராணுவத்தினர் பலி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில், 15 துணை இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Fourteen police killed in militant attack in Manipur | Reuters.com

இந்தியா, சமூகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மைனர் பெண் காதலனுடன் செல்வது குற்றமல்ல!!

டெல்லியைச் சேர்ந்த 17 வயது பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடினார். அந்த பெண்ணை பெற்றோர் மிரட்டி வீட்டில் அடைத்து வைத்தனர். வீட்டில் இருப்பது தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அந்த பெண் வழக்கு தொடர்ந்தார். டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி எஸ்.என்.திங்ரா தீர்ப்பில் கூறியதாவது:

18 வயதுக்கும் குறைந்த மைனர் பெண், எந்த ஆண் மீதும் காதல் வயப்படக் கூடாது, அவரையே கல்யாணம் செய்ய விரும்பக் கூடாது என்று இந்திய தண்டனைச் சட்டத்திலோ, வேறு எந்த சட்டத்திலோ கூறப்படவில்லை. அது ஒரு குற்றமும் இல்லை.

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலிக்கும் பெண்ணுக்கு பெற்றோர் வீட்டில் எந்த பாதுகாப்பும் கிடையாது. அவள் அங்கு பாதுகாப்பாக இருப்பாள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

New Kerela, தமிழ் முரசு

இந்தியா, சட்டம் - நீதி, சமூகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

திருப்பதி கல்யாண மகோத்ஸ்தவம்

நேற்று ஆந்திரா முழுவதும் 294 சட்டமன்ற நகரங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் 5000 தம்பதிகளுக்கு திருமணம் நிகழ்த்தியிருக்கிறது. ஒவ்வொருமணப்பெண்ணிற்கும்்கும்1.28கி தங்கத்தில் தாலி, மெட்டிமற்றும் புதுமண தம்பதியருக்கு புத்தாடைகள் என வழங்கி யுள்ளது.நல்ல முகூர்த்த நாளான நேற்று காலை 11.52இலிருந்து 12.30 க்குள் தாலி கட்டினர். அதிக பணவரவுள்ள இக்கோவிலிருந்து சமூகத்திற்கு பயனுள்ளதாகவும் இந்து திருமணமுறையை ஊக்குவிக்குமாறும் இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டதாக TTD தலைவர் கருணாகர ரெட்டி கூறினார்.

மேலும்…

இந்தியா, சமூகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

பிற்பட்டோர் பட்டியலில் மேலும் சில சாதிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தினமணி: புதுவை, கர்நாடகம், மகாராஷ்டிரம், டாமன் -டையூ, அந்தமான் -நிக்கோபார் தீவுகள், திரிபுரா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சில சாதிகளையும், சமூகங்களையும் மத்திய பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. சாதிகள் மற்றும் சமூகங்களின் பெயர்களை சரிசெய்வது அல்லது திருத்துவதும் இதில் அடங்கும்.

The Hindu :: Cabinet approves inclusion in Central OBCs list: The castes which would be made part of the OBC central list include Rana in Daman & Diu and Kareng (Andman & Nicobar Islands). The Cabinet also approved the inclusion of additional areas of Jharkhand in the Scheduled Areas provided in the Fifth Schedule of the Constitution. He said the areas of Udhwa and Mandro Block in Sahebgunj district and two panchayats of Rabda and Bakoria of Satbarwa block in Palamu district were “inadvertently left out” in the earlier inclusion process.

இந்தியா, சமூகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

அமெரிக்கா செல்ல குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை

தொடங்கும் ஜனவரி 2008 முதல் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்் கடல் வழியாகவும் தரை வழியாகவும் அமெரிக்கா செல்ல பிறப்பு சான்றிதழ் மட்டுமே போதுமானது.

ஆனால் ஆகாய வழியாக செல்லபவர்களுக்கு இப்பொழுது இருக்கும் நடைமுறை தொடரும்.

CNN-IBN

ATM ல் கள்ள நோட்டுகள ் – RBI எச்சரிக்கை.

ATM ல் எடுக்கும் பணத்தில் சில கள்ள நோட்டுகள் இருப்பதாக RBI எச்சரிக்கை விடுத்துள்ளது.

The Times of India

இந்தியா, சமூகம், வணிகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

ஆப்பிரிக்காவை விட இந்தியகுழந்தைகள் நிலை பரிதாபம்


மூன்று வயதுக்குட்பட்ட இந்திய குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகமும், ஐ.நா. சபையின் யுனிசெப் அமைப்பும் இணைந்து அண்மையில் ஒரு ஆய்வை நடத்தின. இதில் 46 சதவீத இந்திய குழந்தைகள் போதிய சத்துணவு இன்றி வாடுவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

எத்தியோப்பியா போன்ற வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் கூட 35 சதவீதத்துக்கும் குறைவான குழந்தைகளே சத்துணவு குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் உணவுக்கு பஞ்சமில்லை. ஆனால் தாய்மார்களின் அறியாமை மற்றும் சுகாதாரச் சேவைகளில் உள்ள குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு போதுமான சத்துணவு கிடைப்பதில்லை என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ஏராளமான வளங்கள் உள்ளன. பட்ஜெட் நிதி ஒதுக்கீடு இருக்கிறது. பரவலான போக்குவரத்து வசதி உள்ளது. குறித்த காலத்துக்குள் இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு தேவையான பலமும் இருக்கிறது என்கிறார் யுனிசெப் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் மார்சியோ பேபில்லி.

Dominican Today , தினகரன் ,

இந்தியா, குழந்தைகள், சமூகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

கீரிப்பட்டி, பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர்கள் ராஜிநாமா?

மதுரை மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரன் ஈரோடு மாவட்ட ஆட்சியராகப் பணி மாறுதல் செய்யப்பட்டதை அடுத்து, பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து பதவி விலகவுள்ளதாக, உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Dinamani

பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம் – மருத்துவ நிபுணர் பிரகாஷ் கோத்தாரி

சென்னை – எய்ட்ஸ் நோய் பரவுவதைத் தடுக்க பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம் என்கிறார் பிரபல பாலியல் மருத்துவ நிபுணர் பிரகாஷ் கோத்தாரி

மேலும் படிக்க இங்கே ……………..

சமூகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »