கொட்ரொக்கி விடுவிக்கப்பட்டார்..

போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் தொடர்புடைய கொட்ரொக்கி கடந்த 6ம் தேதி அர்ஜென்டின அரசால் கைதுசெய்யப்பட்டார். இவரை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் இவர் இன்று பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலதிக விவரங்களுக்கு

சன் டிவி மீது வழக்கு

சன் டிவி நிறுவனம் சிக்னல் பவழங்க மறுப்பதை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் டாடா ஸ்கை டிடிஎச் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

தாட்ஸ் தமிழ்

இந்தியா, சட்டம் - நீதி, வணிகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மைனர் பெண் காதலனுடன் செல்வது குற்றமல்ல!!

டெல்லியைச் சேர்ந்த 17 வயது பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடினார். அந்த பெண்ணை பெற்றோர் மிரட்டி வீட்டில் அடைத்து வைத்தனர். வீட்டில் இருப்பது தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அந்த பெண் வழக்கு தொடர்ந்தார். டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி எஸ்.என்.திங்ரா தீர்ப்பில் கூறியதாவது:

18 வயதுக்கும் குறைந்த மைனர் பெண், எந்த ஆண் மீதும் காதல் வயப்படக் கூடாது, அவரையே கல்யாணம் செய்ய விரும்பக் கூடாது என்று இந்திய தண்டனைச் சட்டத்திலோ, வேறு எந்த சட்டத்திலோ கூறப்படவில்லை. அது ஒரு குற்றமும் இல்லை.

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலிக்கும் பெண்ணுக்கு பெற்றோர் வீட்டில் எந்த பாதுகாப்பும் கிடையாது. அவள் அங்கு பாதுகாப்பாக இருப்பாள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

New Kerela, தமிழ் முரசு

இந்தியா, சட்டம் - நீதி, சமூகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

சிபிஐ குழு அர்ஜென்டீனா செல்கிறது

சி.பி.ஐ கடைசியில் தன் குழுவொன்றை அர்ஜென்டீனாவிற்கு அனுப்பி கூட்ரோக்கியின் ‘நாடு கடத்தலைகொணர்தலை’ (extradition) {நன்றி:பாலா} விரைவுபடுத்த அனுப்ப இருக்கிறது. பி.ஜே.பி, இடதுசாரிகள் என எல்லோரும் குறை சொன்னபிறகு, உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு போட்டபின்பு இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. சிபிஐயின் இயக்குநர் விஜயசங்கர் பேசும்போது 17 நாட்கள் கழித்து அறிவிப்பு வெளியானதில் தாமதம் ஏதும் இல்லை, ஆவணங்களை மொழிபெயர்த்து ஆள் அடையாளங்களை சரிபார்த்த பின்பே அறிவிக்கப் பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.்

DNA – India – Daily News & Analysis

இந்தியா, சட்டம் - நீதி இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மார்கதர்சி நிதி நிறுவன விவகாரம்: பத்திரிகைகள் மீது வழக்கு தொடுக்கும் ஆணையை திரும்பப்பெற்றது ஆந்திர அரசு

ஆந்திரத்தில் ஈநாடு பத்திரிகையும், தொலைகாட்சியும் முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனால் அந்த பத்திரிகையை நடத்தி வரும் ராமோஜி ராவ்வுக்கு சொந்தமான மார்கதர்சி நிதி நிறுவனத்தின் அலுவலங்களில் சோதனை நடத்தினர்.

மார்கதர்சி நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

The Hindu : National : Notice to A.P. on Margadarsi’s petition | Chennai Online – Jaya condemns raids on Margadarsi | IBNLive.com : CNN-IBN – Andhra Pradesh Assembly, adjournment, Eenadu, Margadarsi Financiers

எம்பி3 காப்புரிமை வழக்கு – மைக்ரோசாஃப்ட் நஷ்ட ஈடு தர வேண்டும்

தமிழ்ப்பட பாடல்களை காப்புரிமை கவலை இல்லாமல், எம்பி3-ஆக ஐ-பாடில் இறக்கிக் கொள்ளலாம். ஆனால், அந்த எம்பி3 நுட்பம் குறித்த காப்புரிமை வழக்கில் மைக்ரோசாஃப்டுக்கு எதிராக ‘நடுவர் மன்றம்’ தீர்ப்பளித்திருக்கிறது. இன்னும் மேல் முறையீடு பாக்கி இருக்கிறது.

மைக்ரோசாஃப்டில் இருந்து ஒன்றரை பில்லியன் (4500 கோடி) வாங்கிய கையோடு, எம்பி3-ஐ பயன்படுத்தும் ஆப்பிள், இண்டெல், போன்ற மற்ற பெருந்தலைகளையும் அல்காடெல்-லூசெண்ட் வழக்குத் தொடுக்கலாம்.

Microsoft hit with $1.5 billion patent verdict | CNET News.com

போபோர்ஸ்: குட்ரோச்சி அர்ஜென்டினாவில் கைது

போபோர்ஸ் பீரங்கி வழக்கில் தொடர்புடைய குட்ரோச்சி அர்ஜெண்டினாவில் பிடிபட்டார். அவரை விசாராணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி சி.பி.ஐ அர்ஜெண்டினாவை கேட்டுள்ளது.

the Hindu

தினமலர்.

“Legal formalities as required under Argentine Extradition Act are being fulfilled on the basis of reciprocity as there is no treaty extradition treaty between India and Argentina,” it said.

The agency said after observing mandatory legal and diplomatic formalities, extradition request to extradite Quattrocchi shall be presented through diplomatic channel to the designated Argentine court.

“It is mandatory that the formal extradition request is presented within 30 days of the detention of Quattrocchi,” it said.

இந்தியா, சட்டம் - நீதி இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

விஜயகாந்த் மனு தள்ளுபடி

விஜயகாந்த் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி ஷா, இந்த வழக்கில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும், இழப்பீட்டிற்கான நஷ்டஈடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளதால் மண்டபத்தை ஒப்படைக்க 4 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கி அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

that’s tamil (தமிழில்)

அமெரிக்க படைவீரருக்கு 100 வருடம் சிறை

ஈரக்கில் 14 வயதுப் பெண்ணை கற்பழித்து அவளது குடும்பத்தார் 3பேரைக் கொன்றதை ஒப்புக்கொண்ட அமெரிக்க படை வீரருக்கு 100 வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Fox News

CNN Breaking news

சற்றுமுன்னின் 50வது பதிவு இது. உங்கள் கருத்தை சொல்லுங்க சிறந்த சேவையைப் பெறுங்கள்.

வயதான பெற்றோர்களை கவனிக்காமல் விட்டால் ஜெயில்?

கவனிக்கத்தக்க புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படவிருக்கிறது. இதன்படி தனது பெற்றோர்களை பராமரிக்காமல் விடும் பிள்ளைகளுக்கு மூன்றுமாத ஜெயில் தண்டனையும் ரூ. 5000 வரை அபதாரமும் வழங்கப்படலாம்.

Update
தினமலர் 10 ஆண்டு ஜெயில் தண்டனை எனச் சொல்கிறது

Google news 3 articles.

The Bill also makes the government responsible for the elderly. The government will maintain a register of a senior citizens living in an area and pay them Rs 1000 per month.

இந்தியா, சட்டம் - நீதி இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »