இ-பைசைக்கிள் – பெங்களூரில் அறிமுகம்

பெங்களூரில் பேட்டரியில் இயங்கும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் “இ-பைசைக்கிள்” என்ற இருசக்கர அறிமுகமுகப்படுத்தியுள்ளது

வாகனத்தை சேவியோ என்ற நிறுவனம் இமாசல பிரதேசத்தில் தயாராகின்றது. சீனாவில் இருந்து பேட்டரிஇறக்குமதியாகிறது.

அரை யூனிட் மின்சாரம் இருந்தால் இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 55 கி.மீ. ஓட்டலாம். சார்ஜ் தீர்ந்தால் பெடல் செய்தும் ஓட்டலாம். பேட்டரியை தனியே பிரித்தெடுத்து சார்ஜ் செய்த பிறகு சைக்கிளில் பொருத்திக் கொள்ளலாம்.

இதில் 120 கிலோ பளு எடுத்து செல்லலாம். டபுள்ஸ் செல்லலாம். பிரேக் பிடித்ததும் பேட்டரி தானாக ஆஃப் ஆகிவிடும். சிக்னலிலோ, மற்ற இடங்களிலோ நிற்கும் நேரத்தில் மின்சாரம் செலவாகாது. மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.

ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள இ-பைசைக்கிளை பெங்களூரில் சுசில் வித்யுத் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது மாலை முரசில் வந்த செய்தி. வேறு சுட்டி கிடைத்தால் Update செய்யப்படும்.

அறிவியல், இந்தியா, தொழில் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மார்ச் 10ல் இன்சாட் 4பி விண்ணில் பாய்கிறது

26: டி.டி.எச். எனப்படும் வீடுகளுக்கு நேரடி டிவி ஒளிபரப்பு சேவை மற்றும் தொலைத்தொடர்பு சேவைக்காக, 12 கேயு பேண்ட் மற்றும் 12 சி பேண்ட் டிரான்ஸ்பாண்டர் கருவிகள் கொண்ட இன்சாட் 4பி செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் உள்ள கெரு ஏவுதளத்தில் இருந்து மார்ச் 10ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 3.55க்கு விண்ணில் ஏவப்படுகிறது

DNA , SATELLITE ON THE NET , THE HINDU

அறிவியல், இந்தியா இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

எம்பி3 காப்புரிமை வழக்கு – மைக்ரோசாஃப்ட் நஷ்ட ஈடு தர வேண்டும்

தமிழ்ப்பட பாடல்களை காப்புரிமை கவலை இல்லாமல், எம்பி3-ஆக ஐ-பாடில் இறக்கிக் கொள்ளலாம். ஆனால், அந்த எம்பி3 நுட்பம் குறித்த காப்புரிமை வழக்கில் மைக்ரோசாஃப்டுக்கு எதிராக ‘நடுவர் மன்றம்’ தீர்ப்பளித்திருக்கிறது. இன்னும் மேல் முறையீடு பாக்கி இருக்கிறது.

மைக்ரோசாஃப்டில் இருந்து ஒன்றரை பில்லியன் (4500 கோடி) வாங்கிய கையோடு, எம்பி3-ஐ பயன்படுத்தும் ஆப்பிள், இண்டெல், போன்ற மற்ற பெருந்தலைகளையும் அல்காடெல்-லூசெண்ட் வழக்குத் தொடுக்கலாம்.

Microsoft hit with $1.5 billion patent verdict | CNET News.com

இந்டெல்லின் இந்திய அங்கத்தின் சாதனை

கணினி சில்லுகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் இந்டெல் நிறுவனத்தின் இந்திய மேம்பாட்டு மையம் அடுத்த தலைமுறைக்கான உயர்நிலைக் கணினிகளுக்கான அதிசக்தி வாய்ந்த சில்லை உருவாக்கியுள்ளனர்.இந்திய மையமும் ஒரெகானிலுள்ள மையமும் இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

வாழ்த்துக்கள்!!

அறிவியல் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »