உ.பி தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஏழுகட்ட வாக்குப்பதிவுகளோடு உ.பியின் சட்டசபை தெர்தல் நடக்க இருக்கின்றது. 403 சட்டசபை தொகுதிகளுக்கும் 3 லோக் சபை தொகுதிகளுக்கும் ஆன தேர்தல்கள் ஏப்ரல் 7 துவங்கி மே 8 வரைக்கும் நடைபெறும். மே 11 வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

3.60 லட்சம் மின்னணு வாக்கு சேகரிப்பு எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

மொத்தம் 1,10,000 வாக்குச் சாவடிகள் இரூப்பதை கருத்தில்கொண்டே 7 கட்ட வாக்குப்பதிவுகளை அறிவித்திருப்பதாக தலமைத் தேர்தல் ஆணையர் N. கோபாலசாமி கூறியுள்ளார்.

NDTV

நன்றி: பாஸ்டன் பாலா.

சாகரன் உடல் தகனம்

சாகரன் அவர்களின் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்தன. அவரது முதிர்ந்த தந்தையார் இறுதிச் சடங்குகளை நடத்த அவரது உடல் மின்மயானத்தில் சரியாக 3.55க்கு தகனம் செய்யப் பட்டது.

வலைப்பதிவர் கவிஞர் பாலபாரதியால் தமிழ்மணத்தின் சார்பாக மலர்வளையம் சார்த்தப் பட்டது. மேலும் உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக தேன்கூடு தந்த சாகரனுக்கு ரோஜா மாலை சமர்ப்பித்து அஞ்சலி செலுத்தினார்.

பதிவர்கள் மா.சிவகுமார், லக்கிலுக் ஆகியோர் அவருடன் மின் மயானம் வரை சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் பதிவர் இகாரஸ் பிரகாஷ் அவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

சாகரன் பங்கேற்றிருந்த முத்தமிழ் மன்ற உறுப்பினர்கள் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் பல வலைப்பதிவு அன்பர்கள், அவரது நெருங்கிய நண்பர்கள், அலுவலக தோழர்கள், உறவினர்களின் துயர அஞ்சலியுடன் அவரது இறுதிப் பயணம் நிறைவுற்றது

அறிவிப்பு, பதிவுலகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

சாகரன் இறுதிச்சடங்கு இன்று

தேன்கூடு வலைதிரட்டியின் நிறுவனரும் சக வலைப்பதிவருமான சாகரன் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெறுகின்றன. முழுவிவரம் இங்கே
அறிவிப்பு, பதிவுலகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மேற்கிந்தியத்தீவுகள் அணியில் சாமுவேல்ஸ்

இந்திய புக்கியுடன் தொலைபேசியில் பேசியது தொடர்பான சர்ச்சையில் விசாரணை நடந்து வரும் நிலையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள உலகக்கோப்பைக்கான மேற்கிந்தியத்தீவுகளின் அணியில் சாமுவேல்ஸ் இடம்பிடித்துள்ளார்.


மேல்விவரங்களுக்கு..

அறிவிப்பு, விளையாட்டு இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

சற்றுமுன்… அறிமுகம்

உலகெங்கும் உடைபடும் செய்திகளை உடனுக்குடன் வலைப்பதிக்கும் முயற்சி இது. செய்திக்கென பல தளங்கள் இருக்கின்றபோதிலும் திரட்டிகளில் பதிவுகளை படித்துக்கொண்டிருக்கும் வாசகர்களுக்கும் சக பதிவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த தளம் செயல்பட இருக்கிறது.

சற்றுமுன் வந்த செய்திகள் முக்கியமாக Breaking News வகை செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படும். சில பத்திகளும் செய்தி அலசல்களும் இடம்பெறும். இன்னும் சில சிறப்பம்சங்களை தர இருக்கிறோம்.

உலகின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் பதிவர்களின் கூட்டு முயற்சி இது.

உங்களுக்கு கிடைக்கும் செய்திகளை satrumun@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது பின்னூட்டமாகதெரிவிக்கலாம்.

குழுவில் சேர்ந்து செயல்பட விரும்புபவர்கள் மேலுள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம் கூடவே உங்கள் பதிவின் சுட்டி மற்றும் நீங்கள் வசிக்கும் பகுதியை குறிப்பிடவும்.

இந்த முயற்சி பற்றிய மேலான கருத்துக்களை சொல்லுங்கள். செயல்முறை திருத்தங்களையும் சொல்லுங்கள்.

உங்கள் பேராதரவை நாடும்…

சற்றுமுன் குழு.

*சற்றுமுன், அறிவிப்பு இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »