திமுகவுடன் பல்வேறு பிரச்சனைகளில் கருத்து வேறுபாடு உள்ளதாக ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என். வரதராஜன் கூறியுள்ளார்.
திமுகவுடன் பல்வேறு பிரச்சனைகளில் கருத்து வேறுபாடு உள்ளதாக ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என். வரதராஜன் கூறியுள்ளார்.
போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் தொடர்புடைய கொட்ரொக்கி கடந்த 6ம் தேதி அர்ஜென்டின அரசால் கைதுசெய்யப்பட்டார். இவரை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் இவர் இன்று பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலதிக விவரங்களுக்கு
புவனேஸ்வர், பிப். 24- ஒரிசாவில் முதல்- மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம்- பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் இந்த கூட்டணி ஆட்சி நடக்கிறது.
மொத்தம் உள்ள 30 மாவட்ட பஞ்சயத்தில் பிஜூ ஜனதா தளம்-பாரதீய ஜனதா கூட்டணி 23 இடங்களை கைப்பற்றியுள்ளது. பிஜூ ஜனதா தளம் 19 மாவட்ட பஞ்சாயத்துகளை யும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பாரதீய ஜனதா 4 இடங் களில் வெற்றி பெற்றது.
‘திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய சரியானதருணம் இது’ என ஜெயலலிதா அறிக்கையிட்டுள்ளார்.
என்னை சிறைக்கு அனுப்ப துடிக்கிறார்கள் – விஜயகாந்த்
இன்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் தாக்குதலை சமாளித்த அரசு நாளை இது பற்றி முழு விவரங்களையும் வெளியிட உறுதியளித்துள்ளது. ஒளிப்பதற்கு தங்களிடம் எதுவும் இல்லை என நாடாளுமன்றத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி இன்று கூறினார்.
எதிர்க் கட்சிகளின் ஒட்டு மொத்த ராஜினாமா, அமளிக்கு இடையே இன்று சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார் உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ்.
402 பேர் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 201 உறுப்பினர்கள் தேவை.
இதில் கடந்த 25ம் தேதி நடந்த வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 223 வாக்குகள் கிடைத்தன. இந் நிலையில் இன்று நடந்த வாக்கெடுப்பின்போது பாஜக தவிர்த்த எதிர்க் கட்சிகள் வரிசை காலியாக இருந்தது.
பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏக்களும், காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துவிட்ட நிலையில் பாஜகவினர் மட்டுமே இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.
ராஜினாமா செய்த பகுஜன், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவைக்கு வெளியிலும் பாஜகவினர் உள்ளேயும் அமளியில் ஈடுபட்ட நிலையில் குரல் வாக்கெடுப்பு நடந்தது. இதில் முலாயம் அரசு வென்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
அரசுக்கு ஆதரவாக 214 உறுப்பினர்கள் இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதன் மூலம் தேர்தல் முடியும் வரை முலாயம் சிங்கே முதல்வராக பொறுப்பில் இருக்க முடியும். இம் மாநிலத்தில் ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்ட தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி- தட்ஸ்தமிழ்
நெல்லை மாவட்டத்தில் மருதன் கிணறு ஊராட்சிமன்றத் தலைவர் கடந்த 19-ம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களில் இரண்டாவது முறையாக தலித் ஊராட்சித் தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைக்க முயற்சி மேற்கொண்ட முதல்வர் கருணாநிதிக்கு கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ‘பாரதியார் தமிழ் செம்மல்’ பட்டம் வழங்கி இன்று கவுரவித்தது. குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், முதல்வருக்கு பட்டம் வழங்கினார்.
பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி கவுரவிக்கப்பட்டார்.
இந்திய தலைநகர் டில்லியின் மாநகராட்சி (Municipal Corporation of Delhi – MCD) தேர்தல்கள் ஏப்ரல் 5 அன்று தில்லி மாநில தேர்தல் ஆணையர் S.P.மார்வா அறிவித்துள்ளார். 134 இடங்கள் கொண்ட தற்போதைய நிலையிலிருந்து புது மாநகரசபை 272 இடங்களைக் கொண்டு உலகின் பெருநகர உள்ளாட்சி அமைப்புகளிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்டதாக அமையும்.
மேலும் விவரங்களுக்கு…
மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏக்கள் 66பேர் ராஜினாமாவை அடுத்து உ.பி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.