இன்று ஆஸ்கர்

79ஆவது ஆஸ்கர் விருதுவழங்கும் விழா இன்றிரவு(25/02/2007) நடைபெறுகிறது. ‘சற்றுமுன்…’ முடிவுகளை உடனுக்குடன் தரவிருக்கிறது.

http://www.oscar.com/

ஆஸ்கர் பரிந்துரைகள்(மதி கந்தசாமி)

உலகம், சினிமா இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

நெல்லையில் தலித் பஞ்சாயத்து தலைவர் படுகொலை

நெல்லை மாவட்டத்தில் மருதன் கிணறு ஊராட்சிமன்றத் தலைவர் கடந்த 19-ம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களில் இரண்டாவது முறையாக தலித் ஊராட்சித் தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Dinamani

அரசியல், சமூகம், தேர்தல் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

இந்தியாவின் மணிப்பூரில் பிரிவினைவாதிகளின் தாக்குதலில் 15 துணை இராணுவத்தினர் பலி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில், 15 துணை இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Fourteen police killed in militant attack in Manipur | Reuters.com

இந்தியா, சமூகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

பார்லிமென்ட்டில் நாளை ரயில்வே பட்ஜெட் தாக்கல்

புதுடில்லி: பார்லிமென்ட்டில் நாளை ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பார்லிமென்ட்டில் நாளை (26ம் தேதி) ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் விமானங்களில் பொழுதுபோக்கு வசதிகள் இடம்பெறுவது போல ரயில்வேயில் குறிப்பாக சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொழுதுபோக்கு வசதிகள் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்படலாம் என ரயில் பவன் வட்டாரங்கள் தெரி வித்தன.

source : தினமலர்

பொருளாதாரம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »