மார்கதர்சி நிதி நிறுவன விவகாரம்: பத்திரிகைகள் மீது வழக்கு தொடுக்கும் ஆணையை திரும்பப்பெற்றது ஆந்திர அரசு

ஆந்திரத்தில் ஈநாடு பத்திரிகையும், தொலைகாட்சியும் முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனால் அந்த பத்திரிகையை நடத்தி வரும் ராமோஜி ராவ்வுக்கு சொந்தமான மார்கதர்சி நிதி நிறுவனத்தின் அலுவலங்களில் சோதனை நடத்தினர்.

மார்கதர்சி நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

The Hindu : National : Notice to A.P. on Margadarsi’s petition | Chennai Online – Jaya condemns raids on Margadarsi | IBNLive.com : CNN-IBN – Andhra Pradesh Assembly, adjournment, Eenadu, Margadarsi Financiers

ஜப்பான் வர்த்தகம் – தினவட்டி விகிதம் 0.25% உயர்வு

ஜப்பானின் வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதமாக அந்த நாட்டின் தேசிய வங்கி அதிகரித்தது.

கடன் கொடுப்பதற்கான வட்டி அதிகரிப்பது; வைப்புநிதிகளுக்கான வட்டி மேலும் வருவது – போன்றவை, அதைத் தொடர்ந்து உயர்கிறது. இதன் பிரதிபலிப்பாக, பங்குச்சந்தை குறியீடான நிக்கெய், கடந்த ஏழு வருடங்களில் முதல் தடவையாக 18,000 ஆக உயர்ந்திருக்கிறது.

சாதாரணமாக வட்டி விகிதம் ஏறினால், கடன் பத்திரங்களின் விலை உயர்ந்து, பங்குச்சந்தை சரியும். ஆனால், ஜப்பானில் தலைகீழ். பணவீக்கத்திற்கு பயந்து எக்கச்சக்க சேமிப்பை வங்கிகளில் வைத்திருக்கும் நடுத்தர வர்க்கம், இவ்வித நடவடிக்கைகளினால் நம்பிக்கை அடைந்து, நுகர்வோராக செலவழிக்கவும், முதலீட்டாளராக சந்தையில் ஈடுபடவும் வழிவகுக்கும்.

Bloomberg.com: Japan | FT.com / World / Asia-Pacific – Nikkei hits seven-year high on rate hopes

எம்பி3 காப்புரிமை வழக்கு – மைக்ரோசாஃப்ட் நஷ்ட ஈடு தர வேண்டும்

தமிழ்ப்பட பாடல்களை காப்புரிமை கவலை இல்லாமல், எம்பி3-ஆக ஐ-பாடில் இறக்கிக் கொள்ளலாம். ஆனால், அந்த எம்பி3 நுட்பம் குறித்த காப்புரிமை வழக்கில் மைக்ரோசாஃப்டுக்கு எதிராக ‘நடுவர் மன்றம்’ தீர்ப்பளித்திருக்கிறது. இன்னும் மேல் முறையீடு பாக்கி இருக்கிறது.

மைக்ரோசாஃப்டில் இருந்து ஒன்றரை பில்லியன் (4500 கோடி) வாங்கிய கையோடு, எம்பி3-ஐ பயன்படுத்தும் ஆப்பிள், இண்டெல், போன்ற மற்ற பெருந்தலைகளையும் அல்காடெல்-லூசெண்ட் வழக்குத் தொடுக்கலாம்.

Microsoft hit with $1.5 billion patent verdict | CNET News.com

உலகக்கோப்பையில் Bowl-Out முறை

நடக்கவிருக்கும் உலகக்கோப்பையில் அரை-இறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் ‘டை’யில் முடியுமானால், Bowl-Out முறையில் வெற்றி தீர்மானிக்கப்படும்.

Bowl-Out முறையில் ஒவ்வொரு அணியிலிருந்தும் 5 பந்துவீச்சாளர்கள், தலா இரண்டு பந்துகளை ஸ்டம்பை நோக்கி வீசவேண்டும். எந்த அணி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 பந்துகளில் அதிகமுறை விக்கெட்டை வீழ்த்துகிறதோ, அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். 10 பந்துகளில் இரு அணிகளும் சமமான அளவு விக்கெட்டை வீழ்த்தியிருந்தால், Sudden-Death முறையில் முதலில் முன்னனி பெறும் அணி வெற்றிபெறும்.

மேல் விவரங்களுக்கு

Bowl-Out பற்றிய மேல்விவரங்களுக்கு

விளையாட்டு இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

பிற்பட்டோர் பட்டியலில் மேலும் சில சாதிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தினமணி: புதுவை, கர்நாடகம், மகாராஷ்டிரம், டாமன் -டையூ, அந்தமான் -நிக்கோபார் தீவுகள், திரிபுரா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சில சாதிகளையும், சமூகங்களையும் மத்திய பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. சாதிகள் மற்றும் சமூகங்களின் பெயர்களை சரிசெய்வது அல்லது திருத்துவதும் இதில் அடங்கும்.

The Hindu :: Cabinet approves inclusion in Central OBCs list: The castes which would be made part of the OBC central list include Rana in Daman & Diu and Kareng (Andman & Nicobar Islands). The Cabinet also approved the inclusion of additional areas of Jharkhand in the Scheduled Areas provided in the Fifth Schedule of the Constitution. He said the areas of Udhwa and Mandro Block in Sahebgunj district and two panchayats of Rabda and Bakoria of Satbarwa block in Palamu district were “inadvertently left out” in the earlier inclusion process.

இந்தியா, சமூகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

‘சிகாகோ’ இசைநாடகத்தில் நடிக்க ஷில்பாவிற்கு அழைப்பு

‘பிக் ப்ரதருக்குப்’பின் ஷில்பா உலகளாவிய பெயர்பெற்றவராகிவிட்டார். இப்போது புகழ்பெற்ற ‘சிகாகோ’ இசை நாடகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்துள்ளது, பாடுவது ஷில்பாவின் பலமான திறமையில்லை என்றபோதும்.

‘சிகாகோ’ திரைப் படமாக வந்திருந்ததும் அதில் ரெனே, காத்தரின் ஜீட்டா ஜோன்ஸ், குயின் லத்திஃபா, ரிச்சர்ட் கியர் என புகழ்பெற்ற கலைஞர்கள் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

டயனாவின் நினைவில் நடக்கவிருக்கும் இசைவிழாவில் சிறப்பு விருந்தினராக ஷில்பா கலந்துகொள்ள உள்ளார்.

NDTV

Shilpa has apparently been invited to the July 1 concert because Prince William and Harry were impressed with the way she handled herself on the scandal-packed reality TV show.”William and Harry thought Shilpa was amazing in Celebrity Big Brother and very much hope she will take part on the big day,” a source told the tabloid.According to the report, she is also being lined up to become the first ever face on the new Indian version of fashion magazine Vogue.

சினிமா இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

போபோர்ஸ்: குட்ரோச்சி அர்ஜென்டினாவில் கைது

போபோர்ஸ் பீரங்கி வழக்கில் தொடர்புடைய குட்ரோச்சி அர்ஜெண்டினாவில் பிடிபட்டார். அவரை விசாராணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி சி.பி.ஐ அர்ஜெண்டினாவை கேட்டுள்ளது.

the Hindu

தினமலர்.

“Legal formalities as required under Argentine Extradition Act are being fulfilled on the basis of reciprocity as there is no treaty extradition treaty between India and Argentina,” it said.

The agency said after observing mandatory legal and diplomatic formalities, extradition request to extradite Quattrocchi shall be presented through diplomatic channel to the designated Argentine court.

“It is mandatory that the formal extradition request is presented within 30 days of the detention of Quattrocchi,” it said.

இந்தியா, சட்டம் - நீதி இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

விஜயகாந்த் மனு தள்ளுபடி

விஜயகாந்த் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி ஷா, இந்த வழக்கில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும், இழப்பீட்டிற்கான நஷ்டஈடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளதால் மண்டபத்தை ஒப்படைக்க 4 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கி அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

that’s tamil (தமிழில்)

அமெரிக்கா செல்ல குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை

தொடங்கும் ஜனவரி 2008 முதல் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்் கடல் வழியாகவும் தரை வழியாகவும் அமெரிக்கா செல்ல பிறப்பு சான்றிதழ் மட்டுமே போதுமானது.

ஆனால் ஆகாய வழியாக செல்லபவர்களுக்கு இப்பொழுது இருக்கும் நடைமுறை தொடரும்.

CNN-IBN

தட்ஸ்தமிழ் யூனிகோடுக்கு மாறுகிறது

தமிழ் செய்தித்தளமான தட்ஸ்தமிழ் யூனிகோடுக்கு மாறவிருக்கிறது. யாகூ,MSN, சிஃபி போன்ற தளங்கள் யூனிகோடில் இருந்தாலும் உள்ளூர் செய்திகளுக்கும் அடிக்கடி புதுப்பித்தலும் இயலாத்தாக இருந்தது. தட்ஸ் தமிழ் யூனிகோடுக்கு மாறுவதன் மூலம் பரவலான செய்திகள் உடனுக்குடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஊடகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »