ATM ல் கள்ள நோட்டுகள ் – RBI எச்சரிக்கை.

ATM ல் எடுக்கும் பணத்தில் சில கள்ள நோட்டுகள் இருப்பதாக RBI எச்சரிக்கை விடுத்துள்ளது.

The Times of India

இந்தியா, சமூகம், வணிகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

விம்பிள்டனில் ஆண், பெண் சமமான பரிசுத்தொகை

விம்பிள்டன் போட்டிகளில் இதுவரை இருந்துவந்த ஆண், பெண் வெற்றியாளர்களுக்கான பரிசுத்தொகை வித்தியாசம் சமன்படுத்தப்படவுள்ளது.

Google News 300+ articles

It has been a long time coming — 39 years to be exact — but women’s tennis players will receive prize money equal to the men’s at Wimbledon this year.

Under increasing pressure from female stars like Venus Williams and Maria Sharapova and from society at large, the club announced Thursday that it would put an end to a practice that had proved ever more divisive.

In truth, the gap in prize money had become more symbolic than substantive. The women’s singles champion last year, Amélie Mauresmo earned 95 percent of what mens’ champion Roger Federer earned, with Mauresmo receiving £625,000 to Federer’s £655,000.

உலகம், விளையாட்டு இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிகிறது – தமிழர்கள் அச்சம்

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல் உள்ளனர்.

மேலும்…

அரசியல், ஈழம் - இலங்கை இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

இங்கிலாந்து இளவரசர், ஈரக்கில் போர் வீரராகிறார்

இங்கிலாந்தின் இளைய இளவரசர் ஹாரி ஈராக்கில் பணிபுரியும் அந்நாட்டின் படையில் சேர்ந்து பணியாற்றவுள்ளார் என இங்கிலாந்தின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

CNN
The Hindu
Google news


நன்றி: Surveysan

உலகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

பெண்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் பயன்தரும் பட்ஜட்

2007 பட்ஜட் பெண்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rediff

இந்தியா, பொருளாதாரம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

வயதான பெற்றோர்களை கவனிக்காமல் விட்டால் ஜெயில்?

கவனிக்கத்தக்க புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படவிருக்கிறது. இதன்படி தனது பெற்றோர்களை பராமரிக்காமல் விடும் பிள்ளைகளுக்கு மூன்றுமாத ஜெயில் தண்டனையும் ரூ. 5000 வரை அபதாரமும் வழங்கப்படலாம்.

Update
தினமலர் 10 ஆண்டு ஜெயில் தண்டனை எனச் சொல்கிறது

Google news 3 articles.

The Bill also makes the government responsible for the elderly. The government will maintain a register of a senior citizens living in an area and pay them Rs 1000 per month.

இந்தியா, சட்டம் - நீதி இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

ஆப்பிரிக்காவை விட இந்தியகுழந்தைகள் நிலை பரிதாபம்


மூன்று வயதுக்குட்பட்ட இந்திய குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகமும், ஐ.நா. சபையின் யுனிசெப் அமைப்பும் இணைந்து அண்மையில் ஒரு ஆய்வை நடத்தின. இதில் 46 சதவீத இந்திய குழந்தைகள் போதிய சத்துணவு இன்றி வாடுவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

எத்தியோப்பியா போன்ற வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் கூட 35 சதவீதத்துக்கும் குறைவான குழந்தைகளே சத்துணவு குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் உணவுக்கு பஞ்சமில்லை. ஆனால் தாய்மார்களின் அறியாமை மற்றும் சுகாதாரச் சேவைகளில் உள்ள குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு போதுமான சத்துணவு கிடைப்பதில்லை என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ஏராளமான வளங்கள் உள்ளன. பட்ஜெட் நிதி ஒதுக்கீடு இருக்கிறது. பரவலான போக்குவரத்து வசதி உள்ளது. குறித்த காலத்துக்குள் இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு தேவையான பலமும் இருக்கிறது என்கிறார் யுனிசெப் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் மார்சியோ பேபில்லி.

Dominican Today , தினகரன் ,

இந்தியா, குழந்தைகள், சமூகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

தோல்விக்கு பவுலர்கள் காரணம் -ஹசி பாய்ச்சல்

மெல்போர்ன்:- நியூசிலாந்துக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலிய அணி இழந்ததற்கு பவுலர்கள் தான் காரணம் என ஹசி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகளில் கொண்ட ஒரு நாள் தொடரை 0-3 என் இழந்தது. இதனால் தரவரிசைப்பட்டியிலிலும் முதலிடத்தை பறிக்கொடுத்தது. இது பற்றி கேப்டன் ஹசி அளித்த பேட்டி:-

சிறப்பாக பந்து வீச பவுலர்கள் ஆர்வமாக இருந்தபோதும் அவர்களால் அதை செயல்படுத்த முடியவில்லை. அவர்களுக்கு போதிய அனுபவமும் இல்லை. நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் கடும் நெருக்கடி தந்தனர். இது போன்ற தருணங்களில் பந்து வீச அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 40 ரங்அளுக்கு 4 விக்கெட் இழந்த அணி 350 ரன்களை “சேஸ்” செய்து வென்றதை ஏற்றுக்கொள்ள முடியாது. பவுலர்கள் தங்கல் குறைகளை திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் உலக கோப்பையிலும் இதே நிலைத்தான் ஏற்படும்.

இவ்வாறு ஹசி தெரிவித்தார்.

நன்றி :-தினமலர்.

பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

டாடாவுடன் இணைந்து சென்னை விமான நிலையம் நவீனமயம்.

சென்னை மற்றும் கோல்கத்தா விமானநிலையங்களை நவீனப்படுத்தும் பணியில் டாடா குழுமத்துடன் இணைந்து செயல்பட போவதாக சிங்கப்பூரின் சாங்கி ஏர்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் (சிஏஐ) நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும்..இங்கே..

சென்னை இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

இந்தோனேஷிய கப்பலில் தீ: 350 பயணிகளுக்கு ஆபத்து?

பசிபிக் கடல் மற்றும் இந்திய பெருங்கடலுக்கு இடையே 1500க்கும் மேற்பட்ட குட்டி தீவுகளால் ஆன இந் தோனேசியாவில் பங்கா தீவில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற லெவினா.1 என்ற சிறுகப்பலில் 350க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ஜகார்தாவில் உள்ள தான்ஜ×ங் துறைமுகத்தில் சில பயணிகளை இறக்கி ஏற்றிவிட்டு சென்ற கப்பலில் தீ பிடித்தது.

350 பயணிகளும் தீயில் சிக்கியதில் சிலர் உயிர் பிழைக்க கடலில் குதித்தனர். இன்னும் சிலர் புகை மண்டலத்தில் சிக்கியுள்ளனர். தகவல் கிடைத்ததும் கப்பல் படை படகுகளும், ஹெலி காப்டர்களும் அந்த பகுதிக்கு விரைந்துள்ளன.

*source மாலைமலர்

விபத்து இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »