நில நடுக்கம் ( ஆனால் ச்சின்னது)

நியூஸியில் நேற்று இரவு அடுத்தடுத்து மூன்று முறை நில நடுக்கம்
ஏற்பட்டது. சேதாரம் ஒன்றும் இல்லை.

நியூஸிப் பதிவர்கள் அனைவரும்(??) நலமே!

மேலதிக விவரங்கள்:

இங்கே

பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

இத்தாலிய பிரதமர் ராஜினாமா

வெளியுறவுக் கொள்கைபற்றிய வாக்கெடுப்பில் தோல்விகண்டதை அடுத்து இத்தாலிய பிரதமர் ரொமானொ ப்ரோடி தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் தந்தார். இத்தாலிய ஜனாதிபதி ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட்டு, விரைவில் அரசியல் கட்சிகளோடு கலந்தாராய உள்ளார்.

முன்னதாக நடந்த ஓட்டெடுப்பில் ஆப்கானிஸ்தானுக்கு மேலும் படைகளை அனுப்புவது, வட இத்தாலியில் அமெரிக்கப் படையின் அளவை அதிகரிப்பது போன்ற ப்ரொடியின் முடிவுகள் நிராகரிக்கப்பட்டன.

It received 158 votes in favour, just short of the majority of 160needed for approval, while 136 members of the conservative oppositionvoted against the motion.

BBC
Google News 175+ articles

உலகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

ஐசிசி கிரிகெட் உலக கோப்பை மைதானங்கள் & அட்டவணை

ஐசிசி கிரிகெட் உலக கோப்பை இந்த முறை மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளதை அனைவரும் அறிந்ததே! அந்த மைதானங்களின் புகைப்படங்களும் போட்டி அட்டவணையும் உங்கள் பார்வைக்கு.




இந்த - வலைதளத்தில் மேலும் பல தகவல்கள் உள்ளது.

நம்ம அணியும் தயார் தாங்க.. இதோ சந்தோசமாக போட்டோவிற்கு முகம் காட்டும் நமது அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.

சிறு தகவல்: நமது அணியின் வீரர் தோணி ஐசிசி தர வரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்தியா, விளையாட்டு இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

உ.பி தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஏழுகட்ட வாக்குப்பதிவுகளோடு உ.பியின் சட்டசபை தெர்தல் நடக்க இருக்கின்றது. 403 சட்டசபை தொகுதிகளுக்கும் 3 லோக் சபை தொகுதிகளுக்கும் ஆன தேர்தல்கள் ஏப்ரல் 7 துவங்கி மே 8 வரைக்கும் நடைபெறும். மே 11 வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

3.60 லட்சம் மின்னணு வாக்கு சேகரிப்பு எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

மொத்தம் 1,10,000 வாக்குச் சாவடிகள் இரூப்பதை கருத்தில்கொண்டே 7 கட்ட வாக்குப்பதிவுகளை அறிவித்திருப்பதாக தலமைத் தேர்தல் ஆணையர் N. கோபாலசாமி கூறியுள்ளார்.

NDTV

நன்றி: பாஸ்டன் பாலா.

யோகி இராம்தேவிற்கு நில ஒதுக்கீடு சரியா?

மத்தியபிரதேச மாநில அரசு பிரச்சினக்குறிய யோகி இராம்தேவிற்கு இலவசமாக யோக ஆசிரமம் அமைக்க 100 ஏக்கர் நிலம் வழங்குவது் பற்றி மாநில உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் மாநிலத்தின் மூலிகை வளத்தைப் பயன்படுத்தி ஆயுர்வேத மருந்துகளை தயாரிப்பதை ஊக்குவிக்குமுகமாக ஆறு மாதம் முன்பு நிகழ்ந்த ஒரு யோகா பயிற்சிக் கூடத்திலஇராம்தேவை பதஞ்சலி யோகா சன்ஸ்தான் அமைக்க அழைத்ததின் பின்னணியில் இந்த நில ஒதுக்கீடு நடந்துள்ளது. ஜபல்பூரின் புறத்தே நர்மதா நதிக்கரையில் இரண்டு கி.மீ தூரம் கையகப் படுத்தவுள்ள நிலையில் உள்ளூர் மக்கள் சார்பில் படேல் என்பவர் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.

யோகி இராம்தேவிற்கும் பிருந்தா காரட்டிற்கும் இடையே நிகழ்ந்த விவாதங்கள் நினைவிற்கு வருகின்றன. ..

இந்தியா இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

பிரிட்டன் படைகள் ஈராக்கிலிருந்து வெளியேற்றம்?

ஈராக்கிலிருக்கும் ப்ரிட்டன் படைகளிலிருக்கும் 7000 வீரர்களிலிருந்து 1500பேரை உடனடியாகவும், 3000 பேரை டிசம்பருக்குள்ளாகவும் தாய்நாட்டுக்கு திரும்பச்சொல்லும் முக்கிய அறிவிப்பை டோனி ப்ளேர் இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more…

If confirmed, the announcement of British troop withdrawals would come just weeks ahead of the fourth anniversary of the start of the 2003 Iraq War on March 19.

And it comes shortly after US President George Bush launched a “surge” of 21,500 additional American troops in a bid to pacify the north of Iraq and capital Baghdad, which has been plagued by sectarian fighting and terrorism.

உலகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »